2019ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் ரூடோ தலைமையிலான லிபெரல் கட்சி 157 ஆசனங்களை மட்டுமே வென்று இருந்தது. அங்கு பெரும்பான்மை ஆட்சி அமைக்க 170 ஆசனங்கள் தேவை.
பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் ஆசையில் ஆட்சிக்காலம் முடிய முன்னரே, 2021ம் ஆண்டு, COVID காலத்தில், ஒரு திடீர் தேர்தலை அறிவித்தார் பிரதமர் ரூடோ. ஆனால் அம்முறை ரூடோ கட்சி பெற்றதோ 160 ஆசனங்கள் மட்டுமே.
வேறு வழியின்றி ரூடோ 2022ம் ஆண்டு கனடாவின் NDP (New Democratic Party) கட்சியுடன் confidence and supply என்ற உடன்படிக்கையை செய்தார். அந்த இணக்கப்படி NDP ரூடோ ஆட்சி கவிழாது பார்த்துக்கொள்ளும். பதிலுக்கு NDP விரும்பும் சில திட்டங்களை ரூடோ அரசு நடைமுறை செய்யும்.
தற்போது லிபெரல் கட்சி மீது மக்களின் வெறுப்பு வேகமாக அதிகரிப்பதால், அந்த வெறுப்பு தம்மீதும் பாயாதிருக்க வைக்கும் நோக்கில் NDP இன்று மேற்படி இணக்கத்தில் இருந்து வெளியேறி உள்ளது. அதனால் கனடிய ஆட்சி எந்த நேரமும் கவிழலாம்.