தாய்வான் விவகாரத்தில் பிரான்ஸ் அமெரிக்க கொள்கையுடன் முரண்படலாம் என்ற கருத்துப்பட பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் நேர்முகம் ஒன்றில் கூறியுள்ளார். இதனால் அமெரிக்க ஆய்வாளர் கவலை கொண்டுள்ளனர்.
பிரான்சின் Les Echos என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சீனா-தாய்வான் முரண்பாடு தமது விசயம் அல்ல (not ours) என்றும் மக்கிறான் கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்கா சீன-தாய்வான் விசயத்தை மிகைப்படுத்துவதாகவும் (escalating) மக்கிறான் கூறியுள்ளார்.
The Inter-Parliamentary Alliance on China மக்கிறான் ஐரோப்பா சார்பில் கதைக்கவில்லை (do not speak for Europe) என்று விசனம் கொண்டுள்ளது.
அண்மையில் சீனா சென்ற மக்கிறானுக்கு சீனா மிக உயரிய வரவேற்பை வழங்கி இருந்தது. மக்கிறான் யூக்கிறேன் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர சீனாவின் உதவியை நாடியுள்ளார். அதையும் அமெரிக்கா விரும்பவில்லை.
அமெரிக்கா பிரித்தானியாவுடனும், அஸ்ரேலியாவுடனும் இணைந்து, பிரான்சுக்கு அறிவிக்காது AUKUS இராணுவ அணியை ஆரம்பித்ததும் பிரான்சுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்தது.