இன்று புதன்கிழமை காலை 8:00 மணியளவில் தாய்வானில் 7.6 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் உடைந்துள்ளன. சிறிய, 3 மீட்டர் அளவிலான சுனாமி ஜப்பான் வரை செல்கிறது. உயிரிழப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.
இதன் பின் 6.5 அளவிலான நடுக்கங்களும் (aftershocks) இடம்பெற்றுள்ளன. சிறியன, பெரியனவாக 25 aftershocks இடம்பெற்றுள்ளன.
இந்த நடுக்கத்தின் மையம் தாய்வானுக்கு கிழக்கே Hualien என்ற நகரத்துக்கு தெற்கே 18 km தூரத்தில், 15 km ஆழத்தில் இருந்துள்ளது.
1999ம் ஆண்டு தாய்வானை தாக்கிய 7.6 அளவிலான நடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகி இருந்தனர்.