தாய்வானில் Kang Ning பல்கலைக்கழக President உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது இலங்கை மாணவரை தாய்வான் அழைத்து ஊழல் செய்ய முனைந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு 3 தாய்வான் முகவர்கள் இலங்கை வந்து தாய்வானில் இலவசமாக படிக்க மாணவர்களை தேடியுள்ளனர். மாணவர்கள் தமது விமான செலவுக்கும், விசா செலவுக்கும் மட்டும் $1,000 செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு இலவச பல்கலைக்கழக அனுமதியும், internship தொழிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மேற்படி திட்டத்தை நம்பி மொத்தம் 69 இலங்கை மாணவர் தாய்வான் சென்றுள்ளனர். அதில் 50 பேர் உடனடியாக இறைச்சி வெட்டும் இடம் ஒன்றில் (slaughterhouse) தொழில்புரிய வைக்கப்பட்டனர். அவர்கள் கிழமை ஒன்றுக்கு 40 மணித்தியாலம் வேலை செய்தனர். அதேவேளை இவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் Taipei வளாகம் ஒன்றில் கல்வி தொடரவும் ஆரம்பித்தனர்.
மிகுதி 19 பேரும் இறைச்சி வெட்டும் தொழிலை செய்ய மறுக்க அவர்கள் Tainan வளாகம் ஒன்றில் கல்வி தொடர ஆரம்பித்தனர்.
உண்மையில் இலங்கை மாணவர் தாய்வானில் தொழில் செய்ய அவசியமான அனுமதி பத்திரம் எதையும் கொண்டிருக்கவில்லை. மாணவ விசா மட்டுமே கொண்டிருந்தனர். அவர்களை தொழில் செய்ய வைப்பது சட்டத்துக்கு முரண்.
இவர்களுக்கு அனுமதி வழங்கிய பல்கலைக்கழகமும் அக்காலத்தில் போதிய மாணவர் இன்றி தவித்துள்ளது. அதனால் இலங்கை மாணவரை பயன்படுத்தி பல்கலைக்கழகத்துக்கான அரச மானிய பணத்தை (NT$40,000) பெற்றுள்ளது. அதுவும் சட்டத்துக்கு முரணானது. அதனாலேயே பல்கலைக்கழக president Huang Yi-chun என்பவரும், மேலும் இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் செய்தி சேவை ஒன்று 2018ம் ஆண்டு வெளியிட்ட பதிவுகளின் பின்னரே இந்த விசயம் பகிரங்கத்து வந்து, விசாரணையையும் தூண்டி உள்ளது.