தாய்லாந்து சாட்சியின் மரணத்தில் சந்தேகம்

தாய்லாந்து சாட்சியின் மரணத்தில் சந்தேகம்

2012 ஆம் ஆண்டு 27 வயதுடைய Vorayuth Yoovidhya என்பவர் தனது விலை உயர்ந்த Ferrari காரால் மோதி Wichien Klanprasert என்ற போலீசாரை கொலை செய்து இருந்தார். சந்தேகநபரான Vorayuth Yoovidhya உலக பிரபலம் கொண்ட Red Bull என்ற குளிர்பானத்தை ஆரம்பித்தவரின் பேரன்.

விபத்து இடம்பெற்று 5 ஆண்டுகளின் பின் போலீசார் Yoovidhya வுக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர். ஆனால் Yoovidhya போலீசாரிடம் சரண் அடையவில்லை. குறைந்தது 8 தடவைகள் அழைப்பாணைகளை விடுத்த போலீசார் பின்னர் வழக்கை சட்டப்படி நிறுத்தி உள்ளனர். Yoovidhya வின் வாழ்விடம் தற்போது அறியப்படவில்லை.

இந்நிலையில் மேற்படி விபத்தை பார்த்த சாட்சியான Jaruchart Mardthong, வயது 40, கடந்த வியாழன்கிழமை motorcycle விபத்து ஒன்றில் பலியாகி உள்ளார். முக்கிய வழக்கு ஒன்றுக்கு சாட்சியாக இருந்தவரின் இந்த விபத்தில் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மேற்படி மரணம் தொடர்பான வைத்திய அறிக்கை போலீசாரால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. விபத்தில் ஈடுபட்ட, பெயர் குறிப்பிடப்படாத, மற்றைய motorcylce சாரதி ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மக்களின் சந்தேகம் வலுக்க, மரணித்த சாட்சியின் உடலை இரண்டாம் வைத்திய பரிசோதனைக்கு பிரதமர் விடுத்துள்ளார்.

தாய்லாந்து ‘King’ கரோனாவுக்கு பயந்து சுவிஸ் மலைப்பகுதியில் தற்போது ஒளிந்து வாழ்கிறார்.