தாய்லாந்து இளவரசி தேர்தலில் போட்டி

Ubolratana

தாய்லாந்தின் இளவரசி வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள அரச தலைமை (constitutional monarchy) முறையில் அரச குடும்பத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவை. இந்த இளவரசியின் சகோதரனே (King Maha Vajiralongkorn) தற்போதைய அரசர் ஆவார்.
.
தாய்லாந்து அரசியல் இராணுவ ஆதரவு தரப்புக்கும், மக்கள் ஆதரவு தரப்புக்கும் இடையில் நீண்ட காலமாக இழுபட்டு வந்துள்ளது. மக்கள் தெரிவு செய்திருந்த Yingluck தலைமயிலான ஆட்சியை இராணுவம் 2014 ஆண்டில் பறித்து இராணுவ ஆட்சி செய்துவருகிறது. இராணுவம் அடுத்த மாதம் 24 ஆம் திகதி (மார்ச் 24) அங்கு தேர்தலை நடாத்த அறிவித்தும் உள்ளது.
.
Yingluck நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவரின் கட்சி உட்பட பல காட்சிகள் கூட்டாக உள்ள கூட்டணியின் தலைமையையே இளவரசி Ubolratana Rajakanya Sirivadhana Barnavadi ஏற்கவுள்ளார்.
.
இராணுவத்துடன் இணைந்து இயங்கும் People’s Reform Party என்ற கட்சி இளவரசி எதிர்கட்சியுடன் இணைந்ததை எதிர்க்கின்றது. இளவரசிக்கு எதிராக இராணுவ தரப்பில் முன்னாள் ஜெனரல் Prayuth Chan-ocha போட்டியிடவுள்ளார். அவரே தற்போதைய பிரதமரும் ஆவார்.
.
இந்த விவகாரம் முதல் தடவையாக இராணுவத்துக்கும், அரச குடும்பத்துக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி உள்ளது.
.
1951 ஆம் ஆண்டு பிறந்த இளவரசி அமெரிக்காவில் master’s கல்வி கற்றவர். அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்தபோது இவரை தனது அரச குடும்ப அதிகாரத்தை இழந்து இருந்தார். 2001 ஆம் ஆண்டில், 26 வருடங்களின் பின், விவகாரத்து பெற்ற இவர் தாய்லாந்து திரும்பி இருந்தார். இவர் மீண்டும் அரச குடும்ப அதிகாரத்தை பெற்று இருக்கவில்லை.

.