தாய்லாந்தின் அரசர் நாலாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். King Maha Vajiralongkorn, வயது 66, Suthida Vajiralongkorn Na Aydhaya என்ற 40 வயது பெண்ணை 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளார். அதனால் இவரும் ஒரு இராணி ஆகியுள்ளார். முன்னர் இவர் Thai Airways விமான சேவையின் flight attendant ஆக தொழில் புரிந்தவர்.
.
King Maha Vajiralongkorn 2016 ஆம் ஆண்டே, அவரின் தந்தையாரின் மரணத்தின் பின், அரசராக பதவி ஏற்றார். இந்த அரச பரம்பரை 1782 ஆம் ஆண்டில் இருந்து பதவியில் உள்ளது.
.
மேற்படி அரசர் 1977 ஆம் ஆண்டில் Soamsawali Kitiyakara, 1994 ஆம் ஆண்டில் Yuvadhida Polpraserth, 2001 ஆம் ஆண்டில் Srirasawali Suwadee ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் முறையே 1991, 1996, 2014 ஆம் ஆண்டுகளில் விவாகரத்து செய்துள்ளனர்.
.
அரசருக்கு இதுவரை 2 பெண் பிள்ளைகளும், 5 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். அதில் பலர் அமெரிக்காவில் வாழ்கின்றனர்.
.