தாய்ப்பால் ஊட்டலில் இலங்கைக்கு முதலிடம்

WBTi

தாய்ப்பால் ஊட்டல் தொடர்பாக மொத்தம் 97 நாடுகளில் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படியில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது என்கிறது WBTi (World Breastfeeding Trends Initiative) அமைப்பு. முதல் இடத்தில் உள்ள இலங்கை 91 புள்ளிகளை பெற்றுள்ளது.
.
கியூபா (87.5 புள்ளிகள்), பங்களாதேஷ் (86.0 புள்ளிகள்), Gambia (83.0 புள்ளிகள்), Bolivia (81.0 புள்ளிகள்) ஆகிய நாடுகள் 2 ஆம், 3 ஆம், 4 ஆம், 5 ஆம் இடங்களில் உள்ளன.
.
சீனா 69.5 புள்ளிகளை பெற்று 19 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 64.5 புள்ளிகளை பெற்று 33 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா 45.0 புள்ளிகளை பெற்று 78 ஆம் இடத்தில் உள்ளது.
.
பிரித்தானியா: 50.5 புள்ளிகள், 67 ஆம் இடம்
பிரான்ஸ்: 47.5 புள்ளிகள், 72 ஆம் இடம்
சிங்கப்பூர்: 40.0 புள்ளிகள், 86 ஆம் இடம்
அமெரிக்கா: 37.0 புள்ளிகள், 90 ஆம் இடம்
ஜெர்மனி: 33.5 புள்ளிகள், 94 ஆம் இடம்
அஸ்ரேலியா: 25.5 புள்ளிகள், 95 ஆம் இடம்
.
இந்தியாவை தளமாக கொண்ட இந்த அமைப்பின் நோக்கம் புட்டி பாலுக்கு பதிலாக தாய்ப்பாலை ஊக்கிவிப்பதே.
.