தான Pianoவில் தங்க நாணயம்

GoldCoins

மத்திய பிரித்தானியாவில் வாழும் தம்பதிகளாக Graham Hemmings, வயது 72, அவரது மனைவி Megan, வயது 65, தமது பியானோவை Shropshire என்ற இடத்தில் உள்ள Bishop’s Castle Community Collegeக்கு தானமாக வழங்கி இருந்தனர். அந்த pianoவை சீரமைக்க கல்லூரி 61 வயதுடைய Martin Backhouse என்பவரை அமர்த்தி இருந்தது. சீரமைப்பில் ஈடுபட்ட Martin அந்த பியானோவுள் 913 தங்க நாணயங்கள் இருந்ததை கண்டுள்ளார்.
.
இந்த தங்க நாணயங்களின் உரிமையாளரை தேடும் பணி தோல்வியில் முடிந்துள்ளது. பிரித்தானியாவின் Treasure Act 1966 சட்டப்படி புதையல் அதை கண்டு எடுத்தவருக்கும், புதையல் இருந்த சொத்தின் உரிமையாளருக்குமே சொந்தமாகும். அதன்படி இந்த நாணயங்கள் சீரமைப்பாளர் Martinகும், கல்லூரிக்குமே சொந்தமாகும்.
.
பியானோவை தானம் வாங்கிய தம்பதி இந்த பியானோவை சுமார் 32 வருடங்கள் வைத்திருந்துள்ளார். இவர்களின் 4 பிள்ளைகள் இந்த பியானோவில் பயிற்சி செய்துள்ளனர்.இந்த நாணயங்களின் மொத்த பெறுமதி சுமார் அரை மில்லியன் (500,000) பவுண்ட்ஸ் என்று கூறப்படுகிறது. இவை Queen Victoria, Edward VII, George வ காலங்களில் செய்யப்பட்டவை.
.

அதேவேளை மேலும் சுமார் 50 பேர் இந்த நாணயத்துக்கு உரிமை கொண்டாடி உள்ளார்.
.