தாஜ்மகால் செயல்பாடு தனியார்வசம்?

TajMahal

இந்தியா அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிலையங்களை தனியார் செயல்பாட்டுக்கு விடவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சுமார் 95 வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்கள் இவ்வாறு தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விசனம் கொண்டுள்ளனர் இந்திய வரலாற்று ஆய்வாளர்.
.
Dalmia Bharat என்ற நிறுவனமும், இந்திய உல்லாசப்பயண அமைச்சும் 17ஆம் நூற்றாண்டு தாஜ்மகாலை 5 வருடங்கள்  செயல்படுத்த $3.7 மில்லியன் பெறுமதிக்கு இணங்கி உள்ளன என்றும் கூறப்படுகிறது.
.
Dalmia Bharat தாஜ்மகாலுக்கான நுழைவு கட்டணத்தை தீர்மானிக்கவும், அப்பகுதிகளில் விளம்பரங்கள் அமைத்து வருமானம் பெறவும் உரிமைகள் வழங்கப்படும்.
.
12ஆம் நூற்றாண்டின் Qutub Minar நிலையமும் இவ்வாறு தனியார் பராமரிப்புக்கு கைமாறும் என்றும் கூறப்படுகிறது.
.

மேற்கு வங்காள முதலமைச்சர் Mamata Banerjee இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து கூறுகையில் “sad and dark day in out history” என்றுள்ளார்.
.