தமிழ்நாட்டில் இடம்பெறும் அகழ்வாய்வுகளுக்கு இந்திய மத்திய அரசு இடராக இருக்கிறதா என்று கேட்க வைக்கின்றன மத்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள்.
.
வைகை நதி கரையோரம், மதுரைக்கு தென்கிழக்கே, உள்ள கீழடி என்ற இடத்தில் சுமார் 2200 வருடங்களுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்று இருந்தமை அறியப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்கு முன் இவ்விடத்தை அகழ்வாய்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் பின்னர் நிதிகளை முடக்குவதன் மூலம் அகழ்வு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன.
.
2016 ஆன் ஆண்டில் இந்த அகழ்வை நடாத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரும் அசாம் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
.
கடந்த கிழமை கீழடி ஆய்வு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பை Archeological Survey of India (ASI) பெங்களூர் அகழ்வு அதிகாரிக்கு வழங்கி உள்ளது. அவர் கீழடி அகழ்வில் என்றுமே பங்கு கொள்ளாதவர். அது மட்டுமன்றி அசாமில் உள்ள ராமகிருஷ்ணனை பெங்களூர் அதிகாரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கட்டளை இடப்படுள்ளது.
.
இதனால் விசனம் கொண்ட தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPM) செயலாளர் பாலகிஷ்ணன் மோதி அரசு இந்துவாதத்தை மட்டும் பரப்ப விரும்புகிறது என்றும் ஆதி தமிழ் எச்சங்களை மறைக்க முனைகிறது என்றும் கூறியுள்ளார்.
.
கீழடி பகுதியில் சுமார் 8,000 பொருட்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் தமிழ் பிராமின் சுவடிகள், தங்க நாணயங்கள், இரும்பு ஆயுதங்கள், ஆபரணங்கள் என்பனவும் அடங்கும். Carbon dating செயல்பாடு இவற்றை கி. மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு காலத்தானவை என்று கணித்துள்ளது.
.
தூத்துக்குடி பகுதில் இடம்பெற்ற அகழ்வு வேலை ஒன்றையும் ASI சிரத்தை இன்றி செய்ததாக இந்த வருட ஆரம்பத்தில் சென்னை நீதிமன்றம் குற்றம் சாட்டி இருந்தது.
.