தமிழ்நாட்டில் கள்ள கசிப்பு குடித்தமையால் பலியானோர் தொகை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலைகளில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் மரண தொகை மேலும் அதிகரிக்கலாம்.
சுமார் $0.50 க்கு விற்பனை செய்யப்பட்ட கசிபுக்கு முதலாவது நபர் புதன்கிழமை பலியாகியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் கூற்றுப்படி 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கருணாபுரம் என்ற கிராமமே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள் என்றும் கூறப்படுகிறது.
போலீசார் கசிப்பு காச்சுவோரிடம் இருந்து இலஞ்சம் பெறுவதாக மக்கள் கூறியுள்ளனர். சில போலீசாரும், அரச பணியாளர்களும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு சுமார் 150 பேர் புஞ்சாப் மாநிலத்தில் கசிப்புக்கு பலியாகி இருந்தனர். 2020ம் ஆண்டு அதே மாநிலத்தில் 120 பேர் கசிப்புக்கு பலியாகி இருந்தனர். 2022ம் ஆண்டு பீகாரில் 70 பேர் கசிப்புக்கு பலியாகி இருந்தனர்.