தமிழ்நாடு அரசும் Pegatron, Tata Electronics, Hyundai Motors ஆகிய தொழிநுட்ப நிறுவனங்களும் தமிழ்நாட்டில் $4.4 பில்லியன் முதலிட இன்று ஞாயிறு இணங்கி உள்ளன.
தாய்வானை தளமாக கொண்ட Pegatron அமெரிக்காவின் Apple நிறுவனத்துக்கு பாகங்களை வழங்கும் நிறுவனம். Tata Electronics Apple நிறுவனத்தின் iPhone சிலவற்றை பொருத்தும் (assemble) பணியை செய்கிறது.
Tata Power நிறுவனமும் மேலும் 700 பில்லியன் இந்திய ரூபாய்களை முதலிடவும் திட்டங்களை கொண்டுள்ளது.
அதேவேளை ஜனவரி 10ம் திகதி முதல் 12ம் திகதி வரை பிரதமர் மோதியின் குஜராத் மாநிலத்தில் Vibrant Gujarat Global Summit என்ற முதலீடுகளை அழைக்கும் அமர்வு ஒன்றும் இடம்பெற உள்ளது.
இதுவரை 58 நிறுவனங்கள் $86 பில்லியன் பணத்தை குஜராத்தில் முதலிட முன்வந்துள்ளன. அதில் ArcelorMittal Nippon Steel நிறுவனம் முதலீடும் $13.7 பில்லியன் பணமும் அடங்கும்.