2014 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆட்சி காலத்தில் 35 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக கூறி இந்திய பிரதமர் மோதி அண்மையில் புகழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தரவுகள் அவரின் கூற்றில் உண்மை இல்லை என்று நிரூபிக்கின்றன.
.
அவர் தனது கூற்று ஒன்றில் “2014 ஆம் ஆண்டுவரை, சுதந்திரம் அடைந்து 67 ஆண்டு காலத்தில், 65 விமான நிலையங்களே இருந்தன.” என்றும் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது காலத்தில் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
.
ஆனால் இந்தியாவின் Directorate General of Civil Aviation (DGCA) தரவின்படி 2015 ஆம் ஆண்டில் 95 விமான நிலையங்கள் இருந்துள்ளன. அவற்றில் 31 பாவனைக்கு உதவாமல் இருந்துள்ளன. அதன்படி 64 நிலையங்கள் மட்டுமே பாவனையில் இருந்துள்ளன.
.
2018 ஆம் ஆண்டில் அங்கு 101 விமான நிலையங்கள் உள்ளன. ஆனால் அதில் 27 பாவனைக்கு உதவாமலேயே உள்ளன.
.
அதாவது மோதி தனது கணிப்பில் 2014 ஆம் ஆண்டுக்கான தொகையில் பாவனைக்கு உதவாத நிலைய தொகையை விலக்கியும், ஆனால் 2018 ஆம் ஆண்டுக்கான தொகையில் பாவனைக்கு உதவாத நிலைய தொகையை உள்ளடக்கியும் கணிப்பிட்டு பெருமை கொண்டுள்ளார்.
.
உண்மையில் இவரின் 4 வருட காலத்தில் 10 விமான நிலையங்களே மேலதிகமாக சேவைக்கு வந்துள்ளன.
.