தான் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று செவ்வாய்க்கிழமை ரஜனிகாந்த் கூறியுள்ளார். தனக்கு அண்மையில் ஏற்பட்ட இரத்த அழுத்த வேறுபாடுகளையே அவர் “கடவுளின் எச்சரிக்கை” என்று காரணம் கூறியுள்ளார். ஆனாலும் அவரின் நடிப்பு தொடர்கிறது.
1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி பெங்களூரில் பிறந்த ரஜனி 1975ம் ஆண்டில் நடிக்க ஆரம்பித்து விரைவில் அதிக ஊதியம் பெறும் நடிகர் ஆனார்.
வெற்றிகர நடிகர் ஆனா இவர் அவ்வப்போது அரசியலிலும் தலை காட்டினார்.
1996ம் ஆண்டில் தி.மு.க. வை ஆதரித்த இவர் அக்காலத்தில் ஜெயலலிதா வென்றால் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது இருக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் பின்னர் அவரின் தி.மு.க. உறவை தனது அரசியல் விபத்து என்று கூறி இருந்தார் ரஜனி.
2004ம் ஆண்டில் ரஜனி BJP-AIADMK கூட்டுக்கு ஆதரவை வழங்கினார்.
2014ம் ஆண்டில் பிரதமர் மோதி சென்னையில் உள்ள ரஜனி வீடு சென்று ரஜனியை சந்தித்து இருந்தார். சந்திப்பின் உண்மை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
2017ம் ஆண்டு ரஜனி தான் அரசியலுக்கு வரும் காலம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். அவர் தனது கட்சி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.
இந்த மாத ஆரம்பத்தில் அடுத்த மாதம் (2012ம் ஆண்டு ஜனவரி மாதம்) தனது கட்சியின் சட்டப்படியான பெயர், சின்னம் ஆகியன வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் 2020ம் ஆண்டு முடிய 2 தினங்கள் மட்டும் இருக்கையில் ரஜனி அரசியலில் இருந்து முற்றாக வெளியேறுகிறார்.