தண்ணியில்லா காடாகும் கலிபோர்னியா

CaliWater

அமெரிக்காவின் மிக பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலம் கலிபோர்னியா. இந்த பொருளாதாரம் உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரம் என்றும் கூறப்படுகிறது. San Fransisco, Los Angeles, San Diego, Oakland போன்ற பல பெரிய நகரங்களை கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு பாரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று அம்மாநில கவர்னர் குறைந்தது 25% தண்ணீர் பாவனை குறைப்பை செய்யுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். மீறியோர் தண்டிக்கப்படுவர்.
.
கலிபோர்னியாவுக்கு நீர் வழங்கும் சியாரா நெவாடா (Sierra Nevada) மலைப்பகுதியில் தேவையான அளவு snow இல்லாமை இந்த வறட்சிக்கு ஒரு காரணம். இரண்டாவது காரணம் கலிபோர்னியாவின் நிலக்கீழ் நீர் வருடம் ஒன்றுக்கு சுமார் 15 ட்ரில்லியன் லிட்டர் அளவில் வற்றிப்போவது.
.
கலிபோர்னியாவின் நீர் பாவனையின் 80% பயிர்ச்செய்கைக்கே பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்கு கட்டுப்பாடு இல்லை. ஆனால் இதற்கும் கட்டுப்பாடு வரலாம் எனப்படுகிறது.
.
அங்குள்ள ஒரு வாவியில் மட்டும் நீர்மட்டம் வழமையைவிட 135 அடிகள் குறைவாக காணப்படுகிறது. வழமையாக நிலநடுக்கமே ஒரு இயற்கை எதிரியாக காணப்பட்ட கலிபோர்னியாவில் இப்போ நீர் தட்டுப்பாடே மிகப்பெரிய இயற்கை எதிரியா காணப்படுகிறது.