ஊழல் குற்றச்சாட்டு வழக்கு வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிப்பின் பின் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வயது 70, இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பதவியில் இருந்தபோது கிடைத்த Rolex கடிகாரம் போன்ற அன்பளிப்புகளை விற்பனை செய்து பெற்ற பணத்தை வருமான வரியில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாகவே இவர் சிறை செல்கிறார்.
இம்ரான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போதைய அரசு தொடுத்துள்ளது.
தண்டனை பெற்ற இம்ரான் தனது ஆதரவாளர்களை புரட்சி செய்யும்படி வீடியோ பதிவு ஒன்றின் மூலம் கேட்டுள்ளார்.
இந்த தண்டனை காரணமாக இம்ரான் 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது.