வேனேசுஏலாவுக்கு (Venezuela) உரிய சுமார் $1 பில்லியன் வெகுமதியான தங்கம் தற்போது பிரித்தானியாவின் Bank of England வசம் உள்ளது. இவ்வாறு ஒரு நாடு மற்றைய நாடு ஒன்றில் தமது தங்கத்தை பாதுகாப்பாக வைப்பது வளமை.
ஆனால் தமக்கு ஆதரவு வழங்காத Maduro தலைமையிலான தற்போதைய வேனேசுஏலா அரசை மேற்கு நாடுகள் நிராகரித்து, 2018 ஆம் ஆண்டு முதல் Guaido என்ற அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை சனாதிபதி என்று கூறின. அதன்படி Guaido தற்போது Bank of England வசமுள்ள தங்கத்தை Maduro அரசுக்கு வழங்க வேண்டாம் என்று பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய, நீதிமன்றமும் இணங்கி இருந்தது.
Maduro அரசு மேற்படி தீர்ப்பை appeal செய்தது. இன்று appeal நீதிமன்றம் முனைய தீர்வு முறையற்றது என்று கூறியுள்ளது. அதன்படி தங்கம் Maduro தலைமையிலான தற்போதைய அரசுக்கு வழங்கப்படல் அவசியம். ஆனால் மேற்கின் அரசுகள் தங்கத்தை முடக்கும் நோக்கில் மீண்டும் புதிய வழக்குகளை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
எண்ணெய்வளம் மிக்க மத்திய அமெரிக்க நாடான வேனேசுஏலா அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் தடைகளாலும், உள்நாட்டு ஊழல்களாலும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. தங்கத்தில் முடங்கி உள்ள பணம் கரோனா செலவுகளுக்கு அவசியம் என்கிறது Maduro அரசு.
வேனேசுஏலா சென்று அங்கு இராணுவ ஆட்சி கவிழ்ப்பு செய்ய முனைந்த சில முன்னாள் அமெரிக்க படையினர் வேனேசுஏலா இராணுவத்திடம் அகப்பட்டு தற்போது அங்கு சிறையில் உள்ளனர்.