இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இடம்பெற்ற பயணிகள் நெரிசலுக்கு குறைந்தது 15 பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் Prayagrai மஹா கும்பமேளா நிகழ்வுக்கு பயணித்தவர்கள்.
சனி இரவு 10 முதல் 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த நெரிசலுக்கு மரணித்தோரில் 10 பேர் பெண்கள் என்றும், 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு ரயில்களின் பயணம் தாமதமாகி, மூன்றாம் ரயில் Prayagrai நோக்கி புறப்படும்போது ரயில் நிலையத்தில் பயணிகள் தொகை மிகையாகியே நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே Prayagrai என்ற இடத்து ஆற்றங்கரையோரம் மஹா கும்பமேளா நெரிசலுக்கு 30 பேர் பலியாகி இருந்தனர்.
ஆறு கிழமைகள் வரை இடம்பெறும் மஹா கும்பமேளா நிகழ்வுக்கு சுமார் 400 மில்லியன் பேர் பயணிப்பர்.