டெல்லி முதலமைச்சர் Arvind Kejriwal வியாழக்கிழமை இந்தியமத்திய அரசின் Enforcement Directorate அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பகுதியில் Aam Aadmi Party (AAP) ஆட்சியில் உள்ளது.
2022ம் ஆண்டு டெல்லி பகுதியில் AAP மதுபான விற்பனையை தனியார்மயம் ஆக்கியதால் தனியார் நிறுவங்கள் இலாபம் அடைந்தன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. AAP அந்த சட்டத்தை பின்வாங்கி இருந்தது.
அதேவேளை காங்கிரஸ் கட்சி $20 மில்லியன் பெறுமதியான தமது வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்று கூறியுள்ளது. இதனால் தம்மால் வரும் தேர்தல் செலவுகளை செய்ய முடியாதுள்ளது என்று கூறியுள்ளது.
அதற்கு முன் ராகுல் காந்தி பிரதமர் மோதியை அவமதித்தார் என்று கூறி பா.ஜ. பா.ஜ. கட்சினர் ஒருவர் குஜராத் மாநிலத்தில் தாக்கல் செய்த வழக்கு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. ஆனால் மேல் நீதிமன்றம் அந்த தீர்ப்பை தள்ளியது.