இந்தியாவின் தலைநகர் பகுதிக்கான சட்டசபையை கைப்பற்ற பா.ஜ. கட்சி பெரும் முயற்சிகள் செய்திருந்தாலும் அங்கு ஆட்சியில் உள்ள AAP (Aam Aadmi Party) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என்று முந்திய கணிப்புக்கள் கூறுகின்றன. இன்று சனிக்கிழமை இடம்பெறும் தேர்தலின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் வரும் செவ்வாய்க்கிழமையே வெளிவரும்.
.
தற்போதைய கணிப்புகளின்படி மொத்தம் 70 ஆசனங்களை கொண்ட சபையில் சுமார் 52 ஆசனங்களை AAP பெரும். இரண்டாம் இடத்தில் பா. ஜ. கட்சி உள்ளது. மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் உள்ளது.
.
மோதியின் பா. ஜ. கட்சியின் முஸ்லீம் எதிர்ப்பு சட்டங்கள் பா. ஜ. கட்சி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினாலும், புதிய ஆதரவாளர்களை இணைக்கவில்லை என்றே தேர்தல் கணிப்புக்கள் கூறுகின்றன.
.
டெல்லி சட்டசபை பிரதேசம் சுமார் 14.6 மில்லியன் மக்களை கொண்டது.
.
1993 ஆம் ஆண்டு பா. ஜ. கட்சி இங்கு ஆட்சியை வென்று இருந்தது. அதற்கு பின் 1998, 2003, 2008 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியை வென்று இருந்தது. 2013, 2015 ஆம் ஆண்டுகளில் AAP ஆட்சியை வென்று இருந்தது.
.