இந்திய தலைநகர் டெல்லியை நோக்கி புஞ்சாப், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்லாயிரம் உழவர்கள் படையெடுக்கின்றனர். அவர்கள் டெல்லியை அடைவதை தடுக்க முனைகிறது போலீஸ்.
புஞ்சாப் மாநில உழவர் ஹரியானா மாநிலம் ஊடாக சென்றே டெல்லியை அடையலாம். அவ்வாறு உழவர் செல்வதை ஹரியானா போலீஸ் கணீர் புகை குண்டுகள் வீசி தடுக்கிறது. ஆனாலும் உழவர் மெல்ல முன்னேறி வருகின்றனர்.
டெல்லி வரும் உழவர் விரைவில் இடம்பெறவுள்ள பொது தேர்தல் காலம் வரை தங்கயிருந்து உழவர் வேண்டுகோள்களை தேர்தல் பேசுபொருள் ஆக்கிவிடலாம் என்று மோதி அரசு கருதுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உழவர் ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியே தற்போதைய ஆர்ப்பாட்டம்.