டெல்கிக்கும் பரவியுள்ளது CAB எதிர்ப்பு கலவரங்கள்

Delhi

கடந்த புதன்கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) எதிர்ப்பு கலவரங்கள் தற்போது தலைநகர் டெல்கிக்கும் பரவி உள்ளது. இன்று ஞாயிறுவரை இந்த கலவரங்களுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 4 பேர் போலீசாரால் அசாமில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும், உடைமைகள் தீயிடப்பட்டும் உள்ளன.
.
இந்தியாவின் புதிய National Register of Citizens சட்டத்துக்கும், CAB சட்டத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று ஆளும் பா. ஜ. கட்சி கூறினாலும் பாதிக்கப்பட்டோர் இந்துவாத அரசை நம்ப மறுக்கின்றனர்.
.
டெல்கியில் உள்ள Jamia Milia Islamia University மாணவர்கள் பலரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் அங்கு நுழைந்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசி உள்ளனர்.
.
தலைநகரில் இருந்து 130 km தொலைவில் உள்ள Aligarh Muslim University பகுதியிலும் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி உள்ளனர்.
.
காஸ்மீர் பகுதி போல், அசாம் மாநிலத்திலும் தற்போது Internet சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
.
புதிய CAB சட்டம் இந்திய குடிவரவு சட்டத்துக்கு முரணானது என்று கூறுகின்றனர் சில அரசியல் சட்ட நிபுணர்கள். சுதந்திரகால இந்திய குடிவரவு சட்டம் மத பாகுபாடு கொண்டிருக்க முடியாது என்கிறது. Indian Union Muslim League (IUML) தற்போது CAB சட்டத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.
.