இலங்கையின் தனியார் விமான சேவையான FitsAir வரும் அக்டோபர் 5ம் திகதி முதல் டுபாய் நகருக்கு பயணிகள் சேவையை ஆரம்பிக்க உள்ளது. அக்டோபர் 10ம் திகதி முதல் அது மாலைதீவுக்கும் பயணிகள் சேவையை ஆரம்பிக்கும்.
டுபாய்க்கான சேவை ஆரம்பித்தில் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கிழமைக்கு 3 சேவைகளாக இருக்கும். இதில் ஒரு 7kg எடை கொண்ட carry-on பையையும், ஒரு 30 kg எடை கொண்ட checked-in பையையும் இலவசமாக எடுத்து செல்லலாம்.
1998ம் ஆண்டு இரண்டு Antonov An-8 வகை விமானங்களுடன் தனியார் விமான சேவையை ஆரம்பித்த Expo Aviation விமான சேவை 2001ம் ஆண்டில் ExpoAir ஆக பெயர் கொண்டது. தற்போது இது FitsAir என்ற பெயரில் விமான சேவையை செய்கிறது.
இந்த விமான சேவையிடம் தற்போது 7 விமானங்கள் உள்ளன. அவற்றுள் மூன்று Airbus 320 விமானங்களே நடுத்தர அளவை கொண்டன. ஏனையவை சிறிய விமானங்களே. ஆனால் இது மேலும் 6 விமானங்களை கொள்வனவு செய்கிறது. அவற்றுள் பெரிய Airbus A330-200, Boeing 737-800 ஆகியனவும் அடங்கும்.
FitsAir விமான சேவை Aberdeen Holding Group என்ற நிறுவனத்தின் அங்கம். இதன் Chairman ஆக Shafik Kassim என்பவரும், Managing Director ஆக Omar Kayaam என்பவரும் பதவி வகிக்கின்றனர்.
FitsAir பொதிகளை காவும் சேவையையும் செய்கிறது.