டிரம்ப் ஆட்சியில் சீன-ஐரோப்பிய உறவு வளர்ச்சி

ParisAccord

தன்னிச்சையாக டிரம்ப் அரசு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை நடைமுறைப்படுத்த, வெறுப்படைந்த ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் சீனாவின் நெருக்கத்தை நாட ஆரம்பித்துள்ளன. நேற்று ஜுன் முதலாம் திகதி டிரம்ப் அரசு சூழல் மாசடைவதை தடுக்கும் பொருட்டு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Paris Accord என்ற இணக்கத்தில் இருந்து வெளியேறியது ஐரோப்பாவை மேலும் சீனா நோக்கி தள்ளியுள்ளது.
.
அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் Paris Accord என்ற வளிமண்டலத்துக்கு பாதகமான (greenhouse gas emission) வாயுக்களை குறைக்கும் இணக்கத்தில் கையொப்பம் இட்டிருந்தன. சிரியா, நிக்கராகுவா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இணைய மறுத்து இருந்தன. இப்பொழுது அமெரிக்காவும் அந்த இரண்டு நாடுகளுடன் இணைந்து உள்ளது.
.
இந்நிலையில் இன்று வெள்ளி ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் நெருக்கத்தை வலுப்படுத்தும் உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுள்ளன. அத்துடன் ஜெர்மன் தலைவி அங்கேலா மேர்க்கெல் (Angela Merkel) ஐரோப்பா சொந்த காலில் நிற்க வேண்டும் என்றுள்ளார். அவர் மறைமுகமாக அமெரிக்காவின் தயவில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றுள்ளார்.
.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Donald Tuskஉம் இவ்வாறான கருத்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது கூற்றில் “China and Europe have demonstrated solidarity” என்றுள்ளார்.
.