அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) திருப்திப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau). இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சராக Stephane Dion என்பவரே செயல்பட்டு வந்துள்ளார். Dion டிரம்ப் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே தற்போது, டிரம்ப் அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், வெளியுறவு பதவியை இழந்துள்ளார்.
.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில், டிரம்ப் பெரும் முஸ்லீம் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். முஸ்லீம்களை தடை செய்யவேண்டும், முஸ்லீம்களை மட்டும் விசேட கவனத்துடன் கையாள வேண்டும் என்றெல்லாம் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். இவ்வாறான டிரம்ப்பின் கருத்துக்களை Dion வன்மையாக சாடியிருந்தார். தற்போது டிரம்ப் ஜனாதிபதியாகவும் நிலையில், அவரை திருப்தி செய்யும் நோக்கில் கனடிய பிரதமர் ரூடோ Dionனின் பதவியை பறித்துள்ளார்.

தற்போது Chrystia Feeland என்பவர் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். டிரம்ப் வெல்லாது ஹில்லாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்திருந்தால் Dion பதவியை தொடர்ந்தும் கொண்டிருந்திருக்கக் கூடும்.
.
.
அதேவேளை சோமாலியாவில் பிறந்து அகதியாக கனடா வந்திருந்த அஹமெட் ஹுசேன் என்பவர் குடிவரவு அமைச்சர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
.