அமெரிக்க நேரப்படி ஞாயிறு (ஜூன் 12) முதல் COVID தொற்று இன்மைக்கான சான்றிதழ் தேவையில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு வெளிநாட்டு பயணிகள் மீது விதிக்கப்பட்ட இந்த சட்டத்தை நிறுத்த அமெரிக்காவின் விமான சேவை நிறுவனங்கள் அழுத்தங்களை வழங்கி வந்தன.
தற்போது 5 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் சுமார் 71% மக்கள் முற்றாக தடுப்பு ஊசி பெற்றுள்ளதால் தம்மால் கட்டுப்பாடுகளை விலக்க முடிகிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் CDC.
இந்த விதி விலக்கல் சுமார் 4.3 மில்லியன் மேலதிக பயணிகளை தரும் என்று அமெரிக்க விமான சேவைகள் கணிப்பிடுகின்றன.
அமெரிக்காவுள் தற்போது விமான பயணங்கள் கரோனாவுக்கு முன்னர் இருந்த நிலைமையை அடைந்துள்ளது என்றாலும், வெளிநாடுகளுக்கான பயணம் தற்போதும் 24% குறைவாகவே உள்ளது. COVID தொற்று இன்மைக்கான சான்றிதழ் விதி பயணிகள் குறைவுக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் ஹாங் காங் உட்பட சீனா போன்ற நாடுகள் தற்போதும் கடுமையான COVID பயண கொள்கைகளை கொண்டுள்ளன. இவை விமான பயணத்தில் பெரும் பங்கை கொண்டவை.