ஞானசாரரை குற்றவாளியென நிரூபித்த பெண்

SriLankaFlag

இலங்கையில் புத்த தர்மத்துக்கே இழுக்கு விளைவிக்கும் முறையில் செயல்பட்டு வந்திருந்த ஞானசார தேரரை Sandhya Ekneligoda என்ற பெண் இலங்கை நீதிமன்றில் குற்றவாளி என நிரூபித்து உள்ளார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஞானசாரர் Penal Code Sections 346 மற்றும் 486 சட்டங்களின்படி குற்றவாளி என ஹோமகம (Homagama) நீதிபதி Udesh Ranatunge தீர்ப்பு கூறியுள்ளார். ஞானசாரருக்கான தண்டனை ஜூன் மாதம் 24 ஆம் திகதி வழங்கப்படும்.
.
இப்பெண்ணின் கணவர் Prageeth Ekneligoda 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி, ராஜபக்ச குடும்ப ஆட்சிக்காலத்தில், காணாமல் போயுள்ளார். இவர் ஒரு கேலிச்சித்திர (cartoon) ஓவியர். இவரை கண்டுபிடிக்கும் பணிகள் முன்னைய ஆட்சி காலத்தில் வேண்டாவெறுப்புடன் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது.
.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்ப ஆட்சி கலைந்தபின், Prageeth தொடர்பான விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருந்தது.
.
இந்த விசாரணை தொடர்பாக, ஆனால் இந்த விடயத்தில் சம்பந்தம் இல்லாத, ஞானசாரர் தேரர் Sandhya மீது மிரட்டல்களை தொடுத்திருந்தார். இவரின் கணவர் ஒரு புலி உளவாளி என்றும், இந்த பெண் ஒரு துரோகி என்றும் கூறிவந்தார். இப்பெண் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் ஏற்றப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
.
2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியே இவர் சட்டத்திடம் அகப்படுக்கொண்டார். அன்றைய தினம் Prageeth கடத்தல் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஒன்றின்போது ஞானசாரர் நீதிமன்றுள் புகுந்து குழப்பம் விளைவித்து, Sandhyaவையும் மிரட்டி உள்ளார். Sandhyaவின் காதருகே சென்றும் மிரட்டல் விட்டுள்ளார் ஞானசாரர். அவற்றை எல்லாம் கண்ட, அன்றைய தினம் நீதிபதியாக இருந்த Ranga Dissanayake இந்த மாத வழக்கில் சாட்சியாக இருந்துள்ளது முக்கியமான விடயம் ஒன்று.
.
ஞானசாரர் மீதனா வழக்கை கைவிடுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும், இணக்கசபைக்கு (Mediation Board) செல்லுமாறு கேட்டிருந்தும், Sandhya ஞாசாரரை சட்டப்படி தண்டிக்க விரும்பியிருந்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
.