சிரியா-ஜோர்டான் எல்லையோரம் நிலைகொண்டிருந்த Tower 22 என்ற அமெரிக்க முகாம் மீது ஆயுத குழு ஆளில்லா விமானம் (drone) மூலம் செய்த தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகியும், 34 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
தாக்கிய குழு எதுவென்று இதுவரை அறியப்படாவிட்டாலும் இந்த குழுவும் ஈரான் ஆதரவு கொண்ட குழுவென்று கருதப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உரிய தண்டனையை அமெரிக்கா உரிய நேரத்தில் வழங்கும் என்று அமெரிக்க சனாதிபதி பைடென் கூறியுள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு பின் தொடரும் சண்டைகளில் அமெரிக்க படையினர் பலியானது இதுவே முதல் தடவை.