மத்திய கிழக்கின் ஜோர்டான் நாட்டில் முன்னாள் இளவரசர் ஒருவர் உட்பட சுமார் 30 பேர் ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டு உள்ள Hamzah bin Hussein என்ற முன்னாள் இளவரசர் நிலை திடமாக தெரியவில்லை. அவருக்கான தொலைபேசி, இணைய தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்காவலில் உள்ளார். அனாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்கிறது ஜோர்டான் அரசு. தனது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அவர் தனது செய்மதி தொலைபேசி மூலம் தெரிவித்து உள்ளார்.
Hamzah காலம்சென்ற King Hussein, அவரின் 4ம் மனைவி Queen Noor ஆகியோரின் மூத்த புதல்வர் ஆவார்.
Bassem Awadallah என்ற முன்னாள் நிதி அமைச்சரும், Sharif Hassan bin Zaid என்ற அரச குடும்பத்தவரும் கைது செய்யப்பட்டோருள் அடங்குவர்.
அமெரிக்கா, சவுதி, எகிப்த் ஆகிய நாடுகள் ஜோர்டான் அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து உள்ளன. தனது தந்தை King Hussein மரணத்தின் பின் 1999ம் ஆண்டும் பதவிக்கு வந்திருந்த தற்போதைய அரசர் King Abdullah ஒரு அமெரிக்க ஆதரவாளர்.