ஜேர்மனியில் 3 மாதத்துள் மீண்டும் தேர்தல்?

AngelaMerkel

இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் இடம்பெற்ற பொதுதேர்தலில் தற்போதைய அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தலைமயிலான Christian Democratic (CDU) கட்சியும் அதன் சகோதர கட்சியும் (CSU) அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவ்வணி வென்ற ஆசனங்களின் தொகை பெரும்பான்மை அரசை அமைக்க போதியதாக இருந்திருக்கவில்லை. அதனால் CDU அணி மற்றைய சில கட்சிகளுடன் கூட்டு ஆட்சி அமைக்க முனைந்தது. ஆனால் அந்த முயற்சியும் தற்போது தோல்வியில் உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறலாம்.
.
கடந்த செப்டம்பரில் இடம்பெற்ற தேர்தலில் நேரடி தெரிவு மூலம் 299 உறுப்பினர்களும், விகிதாசார தெரிவு முறையில் 310 உறுப்பினர்களுமாக மொத்தம் 709 பேர் தெரிவாக தெரிவாக இருந்தனர். அதன்படி அங்கு ஒரு பெரும்பான்மை ஆட்சி அமைக்க குறைந்து 355 ஆசனங்கள் தேவைப்பதுடைத்துட்டது. அனால் அங்கெலாவின் தலைமயிலான CDU கட்சி 200 ஆசனங்களையும், CSU கட்சி 46 ஆசனங்களையுமாக மொத்தம் 246 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தன. இந்நிலையில் CDU/CSU அணி Green கட்சி மற்றும் FDP (Free Democratic Party) ஆகிய கட்சிகளுடன் கூட்டு அரசமைக்க முனைந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
.
பெரும்பான்மை அரசை அமைக்க முடியாத அங்கெலாவுக்கு இரண்டு வழிகளே தற்போது உள்ளன. அதில் ஒன்று சிறுபான்மை அரசை அமைப்பது. இரண்டாவது புதிதோர் தேர்தலை நடாத்துவது. அங்கெலா கூறிய கருத்துப்படி அவர் புதிய தேர்தல் ஒன்றை நடாத்துவதையே விரும்பி உள்ளார். பெரும் செலவில் நடாத்தப்படும் இரண்டாம் தேர்தலும் மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை தோற்றுவிக்கலாம்.
.

பொதுவாகவே ஜெர்மன் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவுடன் விளங்கிய அங்கெலா அண்மையில் அகதிகளுக்கு மிகையான ஆதரவு வழங்கியதால் தனது அரசியல் ஆராதவுகளை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
.