ஜேர்மனியில் மீண்டும் அங்கெல மேர்க்கெல்

AngelaMerkel

ஜேர்மனியில் இன்று இடம்பெறும் தேர்தலில் அந்நாட்டு அதிபர் (chancellor of Germany) அங்கெல மேர்க்கெல் (Angela Merkel) மீண்டும் அந்நாட்டு அதிபராக தெரிவு செய்யப்படவுள்ளார். முந்திவரும் தரவுகளின்படி அங்கெலவின் கட்சியான CDU (Christian Democratic Union) சுமார் 33% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. ஆனாலும் CDU கட்சிக்கு இம்முறை முன்னரிலும் 8.5% குறைவான ஆதரவே கிடைக்கிறது.
.
இரண்டாவது இடத்தில் உள்ள கட்சியான SPD (Social Democrtic Party) சுமார் 20.6% வாக்குகளை பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், அகதிகள், குடிவரவாளர் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடும் போக்கு கொண்ட AfD (Alternativefor Germany) கட்சி சுமார் 12.8% வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட AfD கட்சி, இம்முறையே முதல் முறையாக பாராளுமன்றம் செல்கிறது.
.
அங்கெல மேர்க்கெல் இம்முறை மீண்டும் தெரிவு செய்யப்படின், அவர் நான்காவது தடவையாக ஜேர்மனியின் அதிபராவார். ஆனால் இவர் 8.9% வாக்குகள் பெறும் Green கட்சியுடனும், 9.1% வாக்குகள் பெறும் இடதுசாரி கட்சியுடனும் கூட்டமைத்தே ஆட்சி செய்ய நிர்பந்திக்கப்படும்.
.
2013 ஆம் ஆண்டில் 71.5% மக்களே வாக்களித்து இருந்திருந்தாலும் இம்முறை 75.9% மக்கள் வாக்களிப்பதாகவும் கூறபடுகிறது.
.

தற்போதைய தரவுகளின்படி மொத்தம் 690 ஆசனங்களை கொண்ட சபையில் சுமார் 239 ஆசனங்கள் CDU கையிலும், 150 ஆசனங்கள் SPD கையிலும், 93 ஆசனங்கள் AfD கையிலும், 66 ஆசனங்கள் இடதுசாரிகள் கையிலும், 65 ஆசனங்கள் Green கட்சி கையிலும், 77 ஆசனங்கள் FDP கையிலும் இருக்கும்.
.