ரஷ்யாவில் இருந்து ரஷ்யாவின் எரி வாயுவை (gas) ஜெர்மனிக்கு எடுத்து செல்லும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதிக்கப்படவுள்ள Nord Stream II என்ற குழாய் தொடர்பான வேலைகளில் பங்கு கொள்ளவுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது.
.
இந்த தடையின் கீழ் மேற்படி வர்த்தக முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவங்களுக்கும், தனி நபர்களுக்கும் அமெரிக்கா விசா வழங்க மறுக்கலாம். அத்துடன் அவர்களின் உடமைகளையும் முடக்கலாம்.
.
இந்த தடை மூலம் அமெரிக்கா ஒரு சுதந்திர நாடான ஜேர்மனியின் வர்த்தக நடவடிக்கைகளில் தவறான முறையில் தலையிட முனைகிறது என்று ஐரோப்பிய ஒன்றியமும், ஜெர்மனியின் அங்கெலா மெர்கலும் (Angela Merkel) தமது விசனத்தை தெரிவித்து உள்ளனர்.
.
ரஷ்யாவின் Gazprom என்ற நிறுவனத்துக்கு உரிய Nord Stream II என்ற இந்த ஏரி குழாய் சுமார் 1,225 km நீளம் கொண்டது. இது பல்ரிக் (Baltic) கடலுக்கு கீழால் பதிக்கப்படும். இந்த கட்டுமானத்துக்கு சுமார் $11 பில்லியன் செலவாகும். கட்டுமான முடிவில் ரஷ்யா தனது ஏரி வாயுவை ஐரோப்பாவுக்கு நேரடியாக வழங்கும்.
.
Nord Stream I மூலம் ஐரோப்பாவுக்கு தேவையான 40% ஏரி வாயுவை தற்போது ரஷ்யாவே வழங்கி வருகிறது. பதிலாக அமெரிக்காவின் ஏரி வாயுவை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்ய முனைகிறது ரம்ப் அரசும்.
.
ரஷ்யாவுக்கும் துருக்கிக்கு இடையிலான TurkStream குழாய் பதிப்புக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
.