ஜெர்மன் அமைச்சரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

BTselem

தற்போது இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் Sigmar Gabrielஐ சந்திக்க இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மறுத்துள்ளார்.
அமைச்சர் Gabriel இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்பான B’Tselemஐ சந்தித்ததே இதற்கு காரணம்.
.
1989 ஆம் ஆண்டு யூதர்களால் ஆரம்பிக்கப்பட்ட B’Tselem என்ற மனித உரிமைகள் அமைப்பு (NGO) பாலத்தீனர் மீது இஸ்ரேல் நடாத்தும் சட்டவிரோத தாக்குதல்களை ஆவணப்படுத்தி வருகின்றது. இதை கடும்போக்கு கொண்ட Netanyahu போன்றோர் விரும்பவில்லை.
.
Gabriel தனது பயணத்தின்போது B’Tselem அமைப்பை சந்தித்தால் தான் Gabrielலுடன் சந்திப்பதை தவிர்ப்பேன் என்று Netanyahu முன்னரேயே கூறியிருந்தார். ஆனாலும் Gabriel இன்று B’Tselem உறுப்பினர்களுடன் உரையாடி உள்ளார்.
.
இரண்டு மாதங்களின் முன் பெல்ஜியம் தூதுவரும் இந்த மனித உரிமைகள் அமைப்புடன் உரையாடி உள்ளார். அப்போதும் Netanyshu அரசு அவரிடம் விசாரணை செய்திருந்தது.
.

Gabriel பின்னர் பாலஸ்தீன் பிரதமர் Rami Hamdallahவுடனும் உரையாடி உள்ளார்.
.