ஜெர்மனியில் ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான SPD கட்சி 3ம் இடத்துக்கு தள்ளப்பட, CDU கட்சி முன்னிலையில் உள்ளது. குடிவரவாளர்களை கடுமையாக எதிர்க்கும் கட்சியான AfD இரண்டாம் இடத்தில் உள்ளது.
இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி CDU கட்சி 28% வாக்குகளை வென்று 208 ஆசனங்களை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள AfD கட்சி 20% ஆசனங்களை வென்று 152 ஆசனங்களை பெறுகிறது. தற்போதைய ஆளும் கட்சி 16% வாக்குகளை வென்று 120 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது.
மொத்தம் 630 ஆசனங்களை கொண்ட சபையில் திடமான ஆட்சி அமைக்க குறைந்தது 316 ஆசனங்கள் தேவை. அதனால் கூட்டாக 328 ஆசனங்களை கொண்ட CDU கட்சியும், SPD கட்சியும் கூட்டு அரசை அமைக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனாலும் AfD கட்சி 20% வாக்குகளை வென்று 152 ஆசனங்களை பெற்றது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
GRUNE கட்சி 85 ஆசனங்களை வெல்கிறது.
Die Linke கட்சி 64 ஆசனங்களை வெல்கிறது.