ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் (Berlin) உள்ள Bode Museum என்ற நூதனசாலையில் இருந்து 100 kg (221 இறாத்தல்) எடைகொண்ட தங்க நாணயம் ஒன்று இன்று திங்கள் காலை திருடப்பட்டு உள்ளது. இந்த நாணயம் Big Maple Leaf என்று அழைக்கப்படும்.
.
.
நூதனசாலை பேச்சாளர் Stefen Petersen கூறிய கருத்துப்படி திங்கள் காலை 3:30 மணியளவில் திருடர் ஜன்னல் ஒன்று மூலம் உள்ளே புகுந்து இந்த தங்க நாணத்தை திருடி உள்ளனர். இந்த நாணயத்தில் பதியப்பட்ட வெகுமதி $1 மில்லியன் ஆகும். ஆனால் இதன் சந்தை விலை $4.5 மில்லியனுக்கும் அதிகம் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
.
இந்த நாணயம் 99.999% தங்கத்தை கொண்டது. இது 3 cm தடிப்பும், 53 cm விட்டமும் கொண்டது. கனடாவின் Royal Canadian Mintரினால் தயாரிக்கப்பட்டது இதில் Queen Elizabeth II வின் உருவம் பாதிக்கப்பட்டு உள்ளது.
.
.
நூதனசாலைக்கு அருகே உள்ள தண்டவாளம் வழியே ஒரு ஏணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த ஏணி கொள்ளைக்கு பயன்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மொத்தம் 5 இவ்வகை நாணயங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.
.
.
இந்த நாணயம் உருக்கப்படால், பின்னர் எந்த தடயமும் இன்றி சாதாரண தங்கம் ஆகிவிடும்.
.
.