ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு சந்தேகநபர்கள் 25 பேர் கைது

ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு சந்தேகநபர்கள் 25 பேர் கைது

ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய திட்டமிட்டார்கள் என்று கூறி இன்று புதன்கிழமை 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்நாட்டு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று அரசு கூறுகிறது. இந்த அறிவித்தலை ஜெர்மனியின் நீதி அமைச்சர் Marco Buschann தெரிவித்து உள்ளார்.

அத்துடன் 52 சந்தேக நபர்களுக்கு உரிய 130 சொத்துக்களும் மொத்தம் 11 மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளன. இவரகள் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குழு ஒன்றின் அங்கத்தவர் என்று அரசு கூறுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் ஜெர்மன் நாட்டவர், ஒருவர் ரஷ்யர்.

இவர்களில் ஒருவர் அஸ்ரியா (Austria) என்ற நாட்டிலும், இன்னொருவர் இத்தாலியிலும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த குழுக்களின் தலைவர்களில் ஒருவர் 71 வயதுடையவர் என்றும், அவர் ரஷ்யாவுடன் தொடர்புகளை கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இன்னொரு தலைவர் 69 வயதுடைய முன்னாள் German paratrooper என்றும் கூறப்படுகிறது.

தற்போது Special Forces Command (KSK) என்ற ஜெர்மன் விசேட படை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டவருள் ஒருவர்.

COVID 19 தொடர்பான அரச கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜெர்மனியின் சுகாதார அமைச்சரை கடந்த திட்டமிட்ட இன்னோர் குழுவை விசாரிக்கையிலேயே மேற்படி குழுவின் உண்மை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ரம்ப் ஆதரவு வழங்கும் QAnon குழுவின் கொள்கைகளுக்கு நிகரான கொள்கைகளை இவர்கள் கொண்டுள்ளனர்.