ஜெர்மனியின் இராணுவ அதிகாரிகள் WebEx என்ற இணையம் மூலம் செய்த கலந்துரையாடல் ஒன்றை ரஷ்யாவின் உளவுப்படை ஒற்றுக்கேட்டு, அந்த உரையாடலை பகிரங்கமும் செய்துள்ளது.
சுமார் 38 நிமிடங்கள் இடம்பெற்ற அந்த உரையாடல் உண்மையானது என்பதை ஜெர்மனி ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் இதை பகிரங்கம் செய்த ரஷ்யாவை சாடியுள்ளது ஜெர்மனி.
இந்த உரையாடலின்போது ஜெர்மனி இராணுவ அதிகாரிகள் ரஷ்யாவின் கட்டுப்பாடில் உள்ள கிரைமியாவில் உள்ள பாலம் ஒன்றை தகர்ப்பது தொடர்பாகவும் உரையாடி உள்ளனர். அத்துடன் ஜெர்மனி யுகிறேனுக்கு Taurus cruise missiles வழங்குவது தொடர்பாகவும் உரையாடி உள்ளனர்.
அத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது ஏவுகணைகளையும் வழங்கவுள்ளன என்பதுவும் உரையாடப்பட்டு உள்ளது.
இதையெல்லாம் வெளியிட்ட ரஷ்யா தம்முடனான யுத்தத்தில் மேற்கு நாடுகள் நேரடியாக பங்கு கொள்கின்றன என்று வாதாடியுள்ளது.