இன்று ஞாயிறு வரை ஜப்பானின் தென்பகுதியில் இடம்பெற்ற மழை வீழ்ச்சியின் பின் உருவான வெள்ளத்துக்கு குறைந்தது 35 பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலரை காணவில்லை.
.
பலியானோரில் 14 பேர் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் குடியிருந்தோரே. இந்த நிலையம் திடீர் வெள்ளத்துள் அமிழ்ந்து உள்ளது. இங்கிருந்த 50 வயோதிபரும், 30 பராமரிப்பாளரும் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டு உள்ளனர்.
.
சிலவேளைகளில் இங்கு மணித்தியாலத்துக்கு 4 அங்குல மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களின் மொத்த மழை வீழ்ச்சி 20 அங்குலம் ஆக உள்ளது.
.
அங்கிருந்து வரும் படங்களின்படி சில வீடுகளின் கூரைகளுக்கும் மேலாக வெள்ளம் உயர்ந்து உள்ளது. வீட்டு மக்கள் கூரைகளில் ஏறி உதவிக்கு காவல் இருந்துள்ளனர்.
.