ஜப்பானில் புதன்கிழமை இரவு 7.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே 2011ம் ஆண்டு 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
இரவு 11:36 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்தின் மையம் Fukushima கரையோரம், 60 km ஆழத்தில் இருந்துள்ளது. இந்த நடுக்கத்துக்கு டோக்கியோ நகரும் உள்ளாகி இருந்தது.
நடுக்கத்தின் விளைவாக 1 மீட்டர் (3.3 அடி) சுனாமி ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை பெரும் பாதிப்புகள் எதுவும் பதியப்படவில்லை என்றாலும், சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரத்தை இழந்து உள்ளன.