ஜப்பானின் Fukushima பகுதியில், உள்ளூர் நேரப்படி, செய்வாய் காலை 6:00 மணியளவில் 7.3 அளவிலான பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் உருவாக்கப்பட்ட கடல் அலைகள் 3 மீட்டர் வரை (10 அடிவரை) இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மக்களை உயர் இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
.
.
Fukushima Daiichi அணு மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த மின் நிலையத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. முதலாவது நடுக்கத்தின் பின் 5.4 அளவிலானதும் 4.8 அளவிலானதுமாக இரண்டு சிறு நடுக்கங்களும் இடம்பெற்று உள்ளனவாம்.
.
இந்த நடுக்கத்தை சுமார் 285 km தூரத்தில் உள்ள Tokyo நகரமும் உணர்ந்ததாம்.
.
2011 ஆம் ஆண்டில் இப்பகுதில் இடம்பெற்ற 9.1 அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 18,000 மக்கள் பலியாகி இருந்தனர். அந்த நடுக்கம் 40.5 மீட்டர் (133 அடி) அலைகளை உருவாக்கி இருந்தது.
.