Japan Airlines விமான சேவைக்கு சொந்தமான பெரியதோர் விமானம் Tokyo நகரத்து Haneda விமான நிலைய ஓடுபாதையில் பயணிக்கையில் ஜப்பானின் coast guard விமானத்துடன் மோதியதால் பயணிகள் விமானம் முற்றாக எரிந்துள்ளது. அதில் இருந்த 379 பேரும் தப்பி உள்ளனர்.
விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் flight JAL 516 ஒரு புதிய Airbus 350 வகை விமானம் என்று கூறப்படுகிறது. இது Shin Chitose விமான நிலையத்தில் இருந்து Tokyo வந்திருந்தது.
Coast guard விமானத்தின் விமானியும் தப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் இருந்த 5 பேரின் நிலை இதுவரை அறியப்படவில்லை. இந்த விமானம் ஒரு Bombardier Dash-8 வகை விமானமாகும்.
Coast guard விமானம் நிலநடுக்க நிவாரண பொருட்களை எடுத்து செல்ல இருந்தது.
விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.