ஜப்பானின் Tokyo நகரின் உள்ள Ginza பகுதி ஆரம்ப பாடசாலை (elementary school) ஒன்று அண்மையில் தமது பாடசாலை சிறுவர்களுக்கு புதிய சீருடை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சீருடை வடிவமைப்புக்கு பாடசாலை உலகின் luxury ஆடை தயாரிப்பு நிறுவனமான இத்தாலிய ஆர்மானி (Armani) நிறுவனத்தை நாடி இருந்தனர்.
.
.
ஆர்மானி தயாரித்த சீருடை ஒன்றின் விலை சுமார் 80,000 ஜப்பானிய யென் ($730). இந்த அதீத விளையால் விசனம் கொண்டுள்ளனர் பெற்றார்.
.
.
Taimei Elementary என்ற பாடசாலை மாணர்வர்களுக்கு சீருடை வழங்குவதன் முக்கிய நோக்கமே மாணவர்கள் மத்தியில் ஆடம்பர ஆடை போட்டி வளர்வதை தவிர்க்கவும், மாணவர்களிடையே சமத்துவத்தை பேணவுமே. இந்நிலையில் இந்த பாடசாலையின் நடவடிக்கை வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தவிர்க்கவேண்டிய ஆடம்பரத்தையே திணிக்கிறது இந்த பாடசாலையின் சீருடை.
.
.
இந்த விவகாரம் தொடர்பாக முறைப்பாடுகள் வந்தபோது, இந்த விலை உயர்ந்த சீருடை மாணவர்களுக்கு கட்டாயமானது ஒன்றல்ல என்றுள்ளது பாடசாலை. பாடசாலையின் அந்த கூற்றும் சீருடை நோக்கத்துக்கு எதிரானதே. ஒருசில மாணவர் ஆர்மானி அணிய, வசதி அற்றோர் பிள்ளைகளின் சீருடை இரண்டாம் தரமாகவே பார்க்கபப்டும்.
.