ஜப்பானில் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளின் தடுப்பில் இருக்கையில் மரணித்த Ratnayake Liyanage Wishma Sandamali என்ற 33 வயது இலங்கை பெண்ணின் மரணத்தில் அவரின் உறவினர் சந்தேகம் கொண்டுள்ளனர். மேற்படி பெண் மார்ச் மாதம் 6ம் திகதி மரணித்தார்.
இலங்கை பட்டதாரியான இப்பெண் இலங்கையில் இருந்து மாணவ விசா மூலம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் சென்று அங்கு வருமானத்துக்காக ஆங்கிலம் படிப்பிக்கவும் முனைந்துள்ளார். ஆரம்பத்தில் விசா விதிமுறைப்படி Tokyo நகருக்கு அண்மையில் உள்ள Chiba பகுதில் அவர் ஜப்பான் மொழி கற்க ஆரம்பித்து உள்ளார். ஆனாலும் போதிய வருமானம் இமையால் அவர் பாடசாலைக்கான கட்டணம் செலுத்த தவறி உள்ளார். அதனால் அவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் குடிவரவு அதிகாரிகளுக்கும் அவரின் நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் அங்கு வாழ்ந்த இலங்கையர் ஒருவருடன் குடியிருக்க சென்றார். அனால் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முரண்பாடுகள் காரணமாக அந்த ஆணிடம் இருந்து போலீஸ் பாதுகாப்பு தேடியுள்ளார். பெண்ணின் படிப்பு விசா முடிவடைந்ததை அறிந்த போலீசார் பெண்ணை நாடுகடத்தும் நோக்கில் அவரை தடுத்து வைத்தனர்.
தடுப்பில் இருந்த இப்பெண்ணுக்கு உதவ START என்ற அமைப்பு முன்வந்து. அக்காலத்தில் இலங்கை பெண் சுமார் 25 kg எடை குறைந்து இருந்தார். தனது உடல்நல குறைவை அப்பெண் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளார். ஆனாலும் அவரை வைத்தியசாலைக்கு அனுப்பாது, குடிவரவு திணைக்களம் தாமே தற்காலிக மருத்துவம் செய்துள்ளது.
மார்ச் 6ம் திகதியே இவர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். அன்று அப்பெண் மரணமானார்.