Henley Passport Index 2020 கணிப்பின்படி உலகத்தில் அதிவல்லமை கொண்ட கடவுச்சீட்டாக ஜப்பானின் கடவுச்சீட்டு உள்ளது. சிங்கப்பூரின் கடவுச்சீட்டு இரண்டாம் இடத்திலும், தென் கொரியாவினதும், ஜெர்மனியினதும் கடவுச்சீட்டுக்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆம் இடத்தில் உள்ளது.
.
ஜப்பானின் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 191 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 190 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். தென் கொரியாவினதும் ஜெர்மனியினதும் கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்போர் 189 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.
எட்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கிரேக்கம், நோர்வே ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்போர் 184 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.
ஒன்பதாம் இடத்தில உள்ள அஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து, Czech Republic, Malta ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள்வைத்திருப்போர் 183 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.
72 ஆம் இடத்தில் உள்ள சீனாவின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 71 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.
84 ஆம் இடத்தில் உள்ள இந்தியாவின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 58 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.
97 ஆம் இடத்தில் உள்ள இலங்கையின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
.