அமெரிக்க ஜனாதிபதி ரம்பை அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் ஒட்டு கேட்கும் கருவிகள் மூலம் உளவு பார்க்க முனைந்துள்ளது என்கிறது அமெரிக்காவின் Polico என்ற செய்தி நிறுவனம். அதை மறுக்கிறது இஸ்ரேல்.
.
வெள்ளைமாளிகையிலும் அண்மைய பகுதிகளிலும் இஸ்ரேல் StingRays என்ற IMSI ( International mobile subscriber identit) அறியும் தொழில்நுட்ப கருவிகளை வைத்து ரம்பை உளவு பார்க்க முனைந்துள்ளது கூறப்படுகிறது. IMSI இலக்கம் smart phone களில் உள்ள SIM card உடன் இணைந்த ஒன்று. IMSIயை அறிவதன் மூலம் ஒருவரின் smart phone ஐ உளவு செய்யலாம்.
.
இந்த முயற்சி இஸ்ரேலுக்கு வெற்றியை அளித்ததா என்பது அறியப்படவில்லை.
.
முன்னரும் இஸ்ரேல் அமெரிக்காவை உளவு பார்த்துள்ளது. மொசாட் உளவாளி Rafi Eitan என்பவரின் உளவுகள் பின்னர் பகிரங்கத்துக்கு வந்திருந்தது.
Lawrence Franklin என்ற அமெரிக்கரும் இஸ்ரேலுக்காக அமெரிக்காவை உளவு செய்திருந்தார்..
.