சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து மேற்கே சென்ற சோழர் காலத்து சாசனத்தை நெதர்லாந்தின் Leiden University என்ற பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியா மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
மேற்படி சாசனம் இரண்டு தொகுதிகளில் உண்டு. ஒன்று தமிழிலும் மற்றையது சமஸ்கிரதத்திலும் உள்ளன. மொத்தம் 21 செப்பு தகடுகளில் (copper plates) எழுதப்பட்ட இந்த சாசன தொகுதி பித்தளை bronze வளையத்தால் இணைக்கப்பட்டு உள்ளன. இவை ராஜேந்திர சோழனின் அரச முத்திரையை கொண்டுள்ளன.
இவை அங்கிருந்த புத்த விகாரைக்கு வழங்கப்பட்டவை. அதில் Anaimangalam பகுதியை சூழவுள்ள 26 கிராமங்கள் Chulamanivarmavihara என்ற விகாரைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த விகாரை சோழ மண்டலம் (Coromandel, Cholamandalam) கரையோரம் உள்ள நாகப்பட்டினத்து (Nagapattinam) அரசரால் கட்டப்பட்டது.
காலனித்துவ காலங்களில் மேற்கே எடுத்து செல்லப்பட்ட சுமார் 100,000 எச்சங்கள் இந்திய, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு திரும்ப உள்ளன.