கடந்த சில நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பனாமா நாட்டை மையமாக கொண்ட பினாமி நிறுவனங்கள் விடயம் காரணமாக ஐஸ்லாந்து (Iceland) பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார். Panama Papers என்று அழைக்கப்படும் இந்த விசாரணை ஐஸ்லாந்து பிரதமரும் அவரது மனைவியும் பனாமா நாட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது சொத்துக்களை ஒளித்து வைத்தாக கூறியிருந்தது. அதற்கு Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் குழு உதவி செய்துள்ளது.
.
.
உண்மை வெளிவந்தபோது ஐஸ்லாந்து பிரதமரை பதவி விலகும்படி கூறி ஊர்வலங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதன் விளைவாக பிரதமர் Gunnlaugsson பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
.
.
அதேவேளை இந்த பட்டியலில் இலங்கையர் சார்பில் நிறுவப்பட்ட 3 பினாமி நிறுவனங்கள் உள்ளன. இந்த 3 நிறுவனங்கள் மூலம் சுமார் 22 பேர் சொத்துக்களை ஒளித்து வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
.
இந்தியர் சார்பில் 21 பினாமி நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் ஊடு சுமார் 380 பேர் தமது சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர்.
.
.
பாகிஸ்தானில் 3 நிறுவனங்கள் மூலம் 175 பேர்வரை தமது சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர்.
.