பொருளாதாரத்தில் முடங்கிப்போகும் ஐரோப்பிய நாடுகளில் சைப்பிரசும் அடங்கும். கல்விமான்கள் உலகம் வங்கிகளை ஒரு பாதுகாப்பானதும் புத்திசாலிகளின் பண வைப்பிடமாகவும் அடையாளம் காண்பதுண்டு. ஆனால் சைப்பிரஸ் அது பொய்யாகி விட்டது.
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பும் நோக்கில் அவ்வரசு 100,000 யூரோக்களுக்கும் அதிகமாக Bank of Cyprus PCL, இல் வைப்பு வைத்திருந்தோரின் முதலில் 40% ஐ ‘வரி’ ஆக அபகரிக்கிறது. மிகுதி 60% கூட வைப்பாளார்களுக்கு பணமாக கிடைக்கப்போவது இல்லை. பதிலாக அந்த வங்கிகளில் அவர்களின் 60% இக்கு சமனான பங்கே கிடைக்கும். சுமார் 22.5% பண வைப்பாளர்கள் இந்த புதிய வரிக்கு ஆளாவார்கள் என கூறப்படுகிறது.
சைப்பிரசை இவ்வாறு செய்ய நிர்ப்பந்திப்பது ஐரோப்பிய அரசே. அவர்களுடன் 10 பில்லியன் யூரோக்களை சைப்பிரஸ் கடனாக பெற உள்ளது. அதற்கான நிபந்தனையே இந்த வங்கி வைப்பாளர் மீதான வரி.
இந்த வரியினால் பல ரஷ்யரும் நட்டம் அடைவர். அவர்கள் ரஷ்யாவில் உழைத்த பணத்தை பாதுகாப்பு கருதி சைப்பிரசில் முதலிட்டு இருந்தனர்.