செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற சில இடைக்கால தேர்தல்களில் ரம்பின் கட்சி தோல்விகளையும், பின்னடைவுகளை அடைந்துள்து. இந்த தேர்தல் முடிபுகள் ரம்பின் ஆட்சிக்கு ஆபத்து அல்ல என்றாலும் அவரின் Republican கட்சிக்கு கடும் எச்சரிக்கையாக அமையும்.
Wisconsin மாநிலத்து Supreme Court நீதிபதிகளுக்கான தேர்தலில் ரம்பின் ஆதரவு கொண்டவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றிக்காக ரம்பின் கையாள் ஆக விளங்கும் இலான் மஸ்க் $21 மில்லியன் வரை செலவு செய்திருந்தார். ஆனாலும் Democratic கட்சி ஆதரவு கொண்ட போடியாளரேவென்றார்.
Wisconsin ஒரு swing மாநிலம். Swing மாநிலங்களை இழப்பது அமெரிக்காவில் ஆட்சியை இழப்பதற்கு நிகரானது.
அதேவேளை புளோரிடா மாநிலத்து 6ம் வட்டாரத்தில் ரம்பின் Republican கட்சி போட்டியாளர் இருவர் வென்றாலும், அவர்கள் பெற்ற வாக்குகளின் தொகை வெகுவாக குறைந்து உள்ளது.
இங்குள்ள St. Johns பகுதியில் ரம்ப் 2024ம் ஆண்டு 36% மேலதிக வாக்குகளை பெற்று இருந்தார். ஆனால் செவ்வாய் 10.7% மேலதிக வாக்குகளே Republican கட்சிக்கு கிடைத்துள்ளது. Volusia பகுதியில் கிடைத்த 20.8% மேலதிக செவ்வாய் 1.9% ஆக குறைந்துள்ளது. மற்றைய பகுதிகளும் இவ்வாறே.